அர்ஜூன் ரெட்டி' நாயகனுடன் ஜோடி போடும் சுசீந்திரன் பட நாயகி

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'அர்ஜூன் ரெட்டி'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சீயான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற பாலா இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அர்ஜூன் ரெட்டி படம் மூலம் இளைஞர்களை கவர்ந்த நாயகன் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது என்பதையும், இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' பட நாயகி மெஹ்ரீன் பிர்ஜிதா தான் இந்த படத்தின் நாயகி. 'அரிமா நம்பி', இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கவுள்ளார்

இந்த படத்தின் பூஜை சற்றுமுன்னர் ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் விஜய்தேவரகொண்டா, மெஹ்ரீன், ஞானவேல்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

More News

4 ஆஸ்காரை வென்ற தி ஷேப் ஆப் வாட்டர்’: மற்ற விருதுகள் யாருக்கு?

இன்று காலை முதல் நடைபெற்று வரும் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி ஷேப் ஆப் வாட்டர்’ என்ற திரைப்படம் இதுவரை நான்கு விருதுகளை வென்றுள்ளது.

ஆஸ்கார் விழாவில் தமிழ் நடிகைக்கு கிடைத்த மரியாதை

இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மறைவிற்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நயன்தாரா ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து

நயன்தாரா கடந்த சில வருடங்களாக கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருகிறார். புதிய வரவு நடிகைகளும் ஏற்கனவே உள்ள நடிகைகளும் அவரது இடத்தை அசைக்க முடியாத நிலையே தற்போது வரை உள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஹிட் படத்தின் சென்னை வசூல் நிலவரம்

2018ஆம் ஆண்டில் விநியோகிஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் திருப்திகரமான லாபத்தை கொடுத்த முதல் படம் என்ற பெருமை சுந்தர் சி இயக்கிய 'கலகலப்பு 2' திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: இதுவரை பெற்ற விருதுகளின் விபரம்

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளின் விபரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்