கடுமையாக விமர்சித்த திரையரங்கு உரிமையாளரை சந்தித்த விஜய் தேவரகொண்டா: என்ன செய்தார் தெரியுமா?
- IndiaGlitz, [Monday,August 29 2022]
சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்த நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு காரணம் விஜய் தேவரகொண்டாவின் திமிறுதான் என மகாராஷ்டிர மாநிலத்தின் திரையரங்கு உரிமையாளர் ஒருவர் விமர்சனம் செய்த நிலையில் தற்போது அந்த திரையரங்கு உரிமையாளரை விஜய்தேவரகொண்டா நேரில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்காக அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து புரமோஷன் செய்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் புரமோஷனின் போது பாலிவுட் திரைப்பட நடிகர்களின் படங்கள் பாய்காட் செய்யப்படுவது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா நெட்டிசன்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து ‘லைகர்’ திரைப்படத்தையும் பாய்காட் செய்யப்போவதாக நெட்டிசன்கள் அறிவித்தபோது ‘லைகர்’ திரைப்படத்தை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அப்படியே அவர்கள் பாய்காட் செய்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ‘லைகர்’ படமும் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது என்பதால் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் ‘லைகர்’ படத்தின் தோல்விக்கு விஜய்தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் காரணம் என திரையரங்கு உரிமையாளர் மனோஜ் தேசாய் என்பவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் தன்னை கடுமையாக விமர்சனம் செய்த திரையரங்கு உரிமையாளரை சமீபத்தில் சந்தித்த விஜய் தேவரகொண்டா, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் தான் நெட்டிசன்களை விமர்சனம் செய்ததற்கு காரணம் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மட்டுமின்றி அந்த படத்தில் நடித்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கும் தான் என்று விளக்கம் அளித்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து விஜய் தேவரகொண்டாவை பாராட்டிய திரையரங்கு உரிமையாளர் மனோஜ் தேசாய் இனி விஜய்தேவரகொண்டா நடிக்கும் அனைத்து படத்தையும் எங்களது திரையரங்கில் வெளியிடுவேன் என்றும் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.