விஜய்தேவரகொண்டாவின் 'லைகர்' சென்சார், ரன்னிங் டைம் தகவல்: எத்தனை சண்டை? எத்தனை பாடல்?

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘லைகர்’ திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘லைகர்’ திரைப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்றும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் 7 சண்டை காட்சிகள் என்றும் ஆறு பாடல்கள் என்றும் கூறப்படுகிறது.

விஜய்தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யாகிருஷ்ணன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பூரி ஜெகன்நாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு ஆகும். இந்த படம் விஜய் தேவரகொண்டாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விக்ரமை அடுத்து மீண்டும் கேமியோ ரோலில் சூர்யா: ரோலக்ஸ்க்கு இணையாக இருக்குமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடம் ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்த சூர்யா நடிப்பில் கலக்கி விட்டார்

கடலுக்கு அடியில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்: வைரல் வீடியோ!

அஜித்தின் ரசிகர்கள் அவ்வப்போது வித்தியாசமாக ஏதாவது செய்து வருவார்கள் என்பதும் அது குறித்த வீடியோ, புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே. 

ஆர்ஜே அர்ச்சனாவின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா?

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக இருக்கும் ஆர்ஜே அர்ச்சனாவுக்கு இருக்கும் சொத்து மதிப்பு குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகினேனா? காஜல் அகர்வால் கூறிய ஆச்சரிய தகவல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும்

கோவையில் மாநில அளவில் ஜூனியர் தடகள போட்டி: 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் எஸ்எம்எஸ் கல்வி குழுமம் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன.  கோவை அத்லெடிக்  குழுமம் மற்றும் கோவை எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் இணைந்து மாநில