விஜய்தேவரகொண்டாவிற்கு ஏற்பட்ட சிக்கல். சிவகார்த்திகேயன் படகுழு நிம்மதி

  • IndiaGlitz, [Friday,July 26 2019]

விஜய்தேவரகொண்டா நடிப்பில் உருவாகிய 'டியர் காம்ரேட்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் தற்போது 'ஹீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் இந்த படத்தில் நடத்தி வருகின்றனர்.

பைக் ரேஸ் குறித்த கதையம்சம் கொண்ட படமான இந்த படத்தை ஆனந்த் அண்ணாமலை என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஒருசில கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் திடீரென இந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. படப்பிடிப்பின்போது இயக்குனருக்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்ய விஜய்தேவரகொண்டா வலியுறுத்தியதாகவும் இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஒரு படத்திற்கும் 'ஹீரோ' என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்ததால் ஒரே நேரத்தில் ஒரே டைட்டிலில் இரண்டு படங்கள் உருவாகி வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகும் நிலைமை ஏற்பட்டால் பெரும் குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது விஜய்யின் 'ஹீரோ' தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படக்குழுவினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.