விஜய் தேவரகொண்டாவின் 'VD14' பட அறிவிப்பு..! 1854-78 காலகட்டத்தின் நாயகன் கதை..!

  • IndiaGlitz, [Friday,May 10 2024]

விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கிரித்யன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய பான் இந்தியா படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு போர்வீரரின் சிலையின் பின்னணியில் சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விவரிக்கிறது.

19 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு சினிமாவாக, பிரம்மாண்டமான பான் இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது.

முன்னதாக விஜய் தேவரகொண்டாவை வைத்து, ’டியர் காம்ரேட்’, ’குஷி’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. விஜய் தேவரகொண்டா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணி ஹாட்ரிக் ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.. சூப்பர் ஹிட்டான ’டாக்ஸிவாலா’ படத்திற்கு பிறகு விஜய் மற்றும் ராகுல் இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

7 வருடங்களுக்கு பின் விஜய் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற டிவி நிறுவனம்.. 'கோட்' அப்டேட்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தை கவனிக்கும் பணியும்

இன்று முதல் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு.. முதல் ஷெட்யூலில் மாஸ் செய்யும் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் நேற்று சென்னையில் இந்த படத்தின் பூஜை மிக எளிமையாக

பகத் ஃபாசிலின் 'ஆவேஷம்' உள்பட இன்று எத்தனை படங்கள்.. ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது

ஆரா என்றால் என்ன? ஆரா சக்தியின் ரகசியங்களை சொல்கிறார் பிரபல ஆரா ஜோதிடர் வினோத் குமார்!

பிரபல "ஆரா" ஜோதிடர் "ஆரா வினோத் குமார்" ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஆரா" சக்தியின் மர்மங்களை ஆழமாக ஆராய்கிறார்.

கண்கவருமஸ்மோக்கிங் பிஸ்கட் உயிரையே பறிக்கிறதா ?எச்சரிக்கும் மருத்துவர்கள் !

யூடுயுப் இன்ஸ்டா பக்கத்தில் நம்மில் பலர் இதை பார்த்து உள்ளோம்.பார்ப்பவர்களின் கண்களை கவரும் விதமாக உள்ள ஸ்மோக்கிங் பிஸ்கட் தற்போது ஒரு மனிதனின் உயிரையே பலி வாங்குகிறது என்றால் நம்புவீர்களா ?...