நான் பேகம் இல்லை.. பிராமின்.. விஜய் தேவரகொண்டா- சமந்தாவின் 'குஷி' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,August 09 2023]

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ‘குஷி’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இஸ்லாமிய வீட்டு பெண்ணாக இருக்கும் சமந்தாவை முதல் பார்வையிலே பார்த்து விஜய் தேவரகொண்டா காதலிக்கிறார். அவரது பெயர் பேகம் என்று தெரிந்து கொண்டு அவர் பின்னாலேயே சுற்றுகிறார். அப்போதுதான் சமந்தா ’நான் பேகம் இல்லை பிராமின்’ என்று கூறிய அவருக்கு அதிர்ச்சி அளிக்கிறார்.

இதனை அடுத்து பிராமண வீட்டு பெண் தான் சமந்தா என்று தெரிந்தவுடன் விஜய தேவரகொண்டா குடும்பத்தினர் சமந்தாவின் குடும்பத்துடன் சம்பந்தம் பேசுகின்றனர். ஆனால் சமந்தா குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. தந்தையை மீறி திருமணம் செய்து கொள்ளும் சமந்தா தன் தந்தை முன் ஒரு நல்ல தம்பதியாக வாழ்ந்து காண்பிக்க வேண்டும் என்று சவால் விடுகிறார்.

இந்த நிலையில் திடீரென விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையே பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை சமாளித்து அவர்கள் ஒரு மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து காட்டினார்களா? என்பது தான் இந்த ரொமான்ஸ் மற்றும் காமெடி கதையம்சம் கொண்ட குஷி திரைப்படத்தின் கதை என்பது இரண்டு நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது

விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், வெண்ணிலா கிஷோர், லட்சுமி, ரோகினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தை ஷிவா நிர்வானா என்பவர் இயக்கி உள்ளார். ஹேஷம் அப்துல் வகாப் இசையில் முரளி ஒளிப்பதிவில் ப்ரவின்புடி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.