close
Choose your channels

திரையுலகில் மேலும் ஒரு நட்சத்திர ஜோடி.. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணமா?

Tuesday, January 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரை உலகில் ஏராளமான நட்சத்திர ஜோடிகள் சேர்ந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு ஜோடியாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் வரும் பிப்ரவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவர் கொண்டா நடித்த சில படங்களில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என்பதும் இருவரும் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கீதா கோவிந்தம்’ 2019 ஆம் ஆண்டு வெளியான ’டியர் காம்ரேட்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. நடித்திருப்பார்கள்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஆகிய இருவரும் நெருக்கமான நட்புடன் இருப்பதாகவும் இந்த நட்பு பின்னாளில் காதலாக மாறியதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது வரும் பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா தரப்பினரிடம் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment