ரசிகர்கள் கலாய்த்து தள்ளினாலும் அமீர்கான் பட வசூலை முந்திய 'லைகர்'!

  • IndiaGlitz, [Friday,August 26 2022]

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ’லைகர்’ திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான நிலையில் இந்த படம் வெளியான முதல்நாள் முதல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

விஜய் தேவரகொண்டாவின் மிகவும் மோசமான படம் என்றும் அனன்யா பாண்டேவுக்கு நடிப்பு வரவில்லை என்றும் மைக் டைசனை எல்லாம் அடி வாங்க வைக்கும் அளவுக்கு மோசமான படமாக இருந்தது என்றும் ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர். இதனை அடுத்து இந்தப் படம் விஜய் தேவரகொண்டாவின் தோல்விப்பட பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வெளியான முதல் நாளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ’லைகர்’ திரைப்படம் 10 கோடி ரூபாயும், வட மாநிலங்களில் 5.50 கோடி ரூபாயும் தமிழகத்தில் 3 கோடி ரூபாயும் வெளிநாட்டில் 1.50 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் இந்த படம் நேற்று முதல் நாளில் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அமீர்கானின் ’லால் சிங் சத்தா’  முதல் நாளில் உலகம் முழுவதும் 15 கோடி மட்டுமே வசூல் செய்துள்ள நிலையில் தெலுங்கு திரைப்படம் ஒன்று 20 கோடி வசூலாகியுள்ளது பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் இந்த படம் தொடர்ந்து இதே வசூலை செய்யுமா என்பது சந்தேகமே என டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.