எத்தனை கோடி கொடுத்தாலும் வேண்டாம்: தளபதி விஜய் உறுதி
- IndiaGlitz, [Saturday,May 02 2020]
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 9ம் தேதியே ரிலீசாக வேண்டிய நிலையில் தற்போதைய கொரோனா பாதிப்பு காரணமாக காலவரையின்றி இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்கள் அமேசான் பிரைம் உள்பட ஒருசில ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் வதந்தி கிளம்பியது.
இந்த நிலையில் அமேசான் பிரைம் நிறுவனம் ’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரை அணுகியது உண்மைதான் என்றும் மிகப்பெரிய தொகைக்கு ’மாஸ்டர்’ படத்தை வாங்க தயாராக இருப்பதாக தயாரிப்பாளரிடம் அந்நிறுவனம் கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து விஜய்யிடம் கலந்து ஆலோசித்து முடிவு சொல்வதாக ’மாஸ்டர்’ தயாரிப்பாளர் சொல்லியிருக்கிறார்
இதனை அடுத்து விஜய்யிடம் இது குறித்து தயாரிப்பாளர் பேசியபோது ’இந்த தொகையை விட இரண்டு மடங்கு தொகை கொடுத்தாலும் ஓடிடி பிளாட்பாரத்தில் ’மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும் நான் படம் நடிப்பதே என்னுடைய ரசிகர்களுக்காக தான் என்றும் அவர்கள் திரையரங்கில் பார்த்து ரசித்து கொண்டாடுவதற்காக தான் நான் படம் நடிக்கிறேன் என்றும் எனவே ஓடிடியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து அமேசான் நிறுவனத்திடம் தயாரிப்பாளர் விஜய்யின் பதிலை கூறி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே ’மாஸ்டர்’ திரைப்படம் டிஜிட்டலில் வெளியியாவதற்கு வாய்ப்பே இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.