close
Choose your channels

பிகில் படத்தை பார்த்து கொண்டே சிகிச்சை: சிறுவனுக்கு விஜய் தரப்போகும் பரிசு

Saturday, July 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ படத்தை பார்த்துக்கொண்டே சிகிச்சை பெற்ற சிறுவனை நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் சென்னை அண்ணா சாலையில் மோட்டார் சைக்கிளில் தன்னுடைய மாமாவுடன் சென்ற சிறுவன் கீழே விழுந்து காயம் அடைந்த நிலையில் அந்த சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்போது சிறுவன் அழுது ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனை அடுத்து அந்த சிறுவன் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதை தெரிந்து கொண்ட மருத்துவர்கள், செல்போனில் விஜய்யின் ’பிகில்’ படத்தை போட்டு காட்டினார். அப்போது சிறுவன் மிகுந்த ஆர்வத்துடன் ’பிகில்’ படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது மயக்க ஊசி செலுத்தி சிறுவனுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்த செய்தி சமீபத்தில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னுடைய படத்தை பார்த்துக் கொண்டே சிகிச்சை பெற்ற சிறுவனை நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் சிறுவனின் உடல் நலம் பூரணமாக குணம் அடைந்தவுடன் தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் விஜய் மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

’பிகில்’ படத்தை பார்த்துக்கொண்டே சிகிச்சை பெற்ற வெறித்தனமான விஜய் ரசிகரான அந்த சிறுவன் விரைவில் விஜய்யை நேரில் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment