மகனை அடுத்து மகள் செய்த சாதனை: தளபதி விஜய் பெருமிதம்

  • IndiaGlitz, [Friday,February 01 2019]

ஒருபக்கம் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டு படிப்பு, குறும்படத்தில் நடிப்பது, பிரபலங்களை பேட்டி எடுப்பது என பிசியாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விஜய்யின் மகளும் தற்போது தந்தைக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் வகையில் சாதித்துள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் விஜய்யின் மகள் சாஷா, அந்தப் பள்ளியின் பாட்மிண்டன் குழுவில் ஒரு வீராங்கனையாக இடம்பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை, தன்னுடைய அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பள்ளி பகிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மகள் பங்குபெற்ற பேட்மிண்டன் குழு, சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பேட்மிண்டன் விளையாட்டில் சாஷா மிகுந்த ஆர்வமுள்ளவர் என்பதும் அவருடைய விளையாட்டை சமீபத்தில் விஜய் நேரில் ரசித்த புகைப்படங்கள் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகன், மகள் இருவரும் ஒவ்வொரு துறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருவதில் விஜய் நிச்சயம் பெருமை கொண்டிருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா?