விஜய்யின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் வைரல் 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி அதனிடம் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி செய்து வந்த போதிலும் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது என்பதும் இந்தியாவில் 6 லட்சத்தை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சுமார் 5000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கேரள அரசு தீவிர ஏற்பாடு செய்து வருகிறது

அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய்யின் போஸ்டர் ஒன்று அம்மாநிலத்தில் வைரலாகி வருகிறது. பிகில் திரைப்படத்தில் உள்ள ராயப்பன் கேரக்டர் விஜய்க்கு மாஸ்க் அணிந்தவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும், அதில் உள்ள கொரோனா வைரஸ் குறித்த வாசகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் விஜய்யின் ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதை கணக்கில் கொண்டு இந்த போஸ்டர் அங்கு முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

More News

தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் நள்ளிரவில் கைது: கொலை வழக்கும் பதிவு

சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரணம் குறித்த வழக்கில் ஏற்கனவே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோர்

நயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல நடிகர் நடிகைகள் போகவே மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குவது கடந்த சில வருடங்களாகவே ஒரு வழக்கமாக உள்ளது

கொரோனா லாக்டவுன்: வருமானம் இல்லாததால் மீன் வியாபாரியான நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு முடங்கியிருப்பதால் பெரிய நடிகர்களுக்கு எந்தவிதமான

சிறுமி கொலையாளிக்கு தூக்கு தண்டனை: புதுக்கோட்டை எஸ்பி ஆவேசம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை ராஜா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்து கண்மாயில் உள்ள புதரில் வீசி சென்ற

300 ரூபாய் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை ஊழியர்கள்

உபி மாநில மருத்துவமனை ஒன்றின் ஊழியர்கள் 300 ரூபாய் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளி ஒருவரை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது