பஞ்சாயத்து தேர்தலுக்காக பக்காவாக தயாராகும் விஜய்

  • IndiaGlitz, [Tuesday,July 04 2017]

இளையதளபதி விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகள் அரசியலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கூறி வரும் நிலையில் விஜய் அதிரடியாக அரசியல் களத்தில் இறங்க தயாராகிவிட்டார். ஆனால் இப்போதைக்கு அவர் இறங்குவது 'மெர்சல்' படத்தில் அரசியல்வாதி கேரக்டராக என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் மூன்று கேரக்டர்களில் ஒன்று பஞ்சாயத்து தலைவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் அட்லி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றின் பின்னணி 'மெர்சல்' பட போஸ்டர் காணப்படுகிறது. இந்த போஸ்டரில் விஜய்யும் மொட்டை ராஜேந்திரனும் தேர்தல் களத்தில் நிற்பது போல் காணப்படுகிறது. மேலும் இந்த புகைப்படத்தின் பின்னணியில் இந்திய தேசிய கொடியும் ஒரு கட்சியின் கொடியும் உள்ளது. இதுகுறித்து படக்குழுவினர்களிடம் இருந்து நாம் தெரிந்து கொண்ட வரையில் விஜய் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் காட்சி படமாக்கப்படுவதாகவும், விஜய்க்கு ஜல்லிக்கட்டு காளை சின்னமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 'மெர்சல்' ஃபர்ஸ்ட்லுக்கில் ஜல்லிக்கட்டு காளையின் வடிவில் டைட்டில் இருந்ததால் இந்த படத்தில் தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு காட்சிகள் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. அந்த வகையில் அவர் ஜல்லிக்கட்டு காளையின் சின்னத்தில் போட்டியிடுவதாக இருக்கலாம்.
ஒருவேளை விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால் மெர்சல் படத்தில் உள்ள ஜல்லிக்கட்டு காளை சம்பந்தப்பட்ட சின்னத்தையே பயன்படுத்துவாரா? என்பதையும் இந்த படம் அவருடைய அரசியல் வாழ்விற்கு வழிகாட்டுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'வேலைக்காரன்' படத்தை முந்தியது மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதமுள்ளது.

நான் தினமும் மூன்று பெண்களுடன் தூங்குவேன்: ராம்கோபால் வர்மா

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மா தனது டுவிட்டரில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வருபவர் என்பது தெரிந்ததே

இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன். கமல்ஹாசன்

கடந்த 1ஆம் தேதியில் இருந்து ஒரே நாடு ஒரே வரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தது. ஆனால் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் வரியும் சேர்ந்து கொண்டதால் ஒருசில துறையினர் இரட்டை வரி என்ற கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்

பழைய ரூ.500, ரூ1000 நோட்டுக்களை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு!

மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்தது ஏன்? பெண் இயக்குனர் பதில்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தினமும் ஒரு மணி நேரம் பெரும்பாலான பார்வையாளர்களை கட்டிப்போட்டி வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒரே குறையாக பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுவது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் இன்னும் கொஞ்சம் பிரபலமானவர்களாக இருந்திருக்கலாம் என்பதுதான்...