ரஜினியுடன் போனில் பேசிய விஜய்.. காக்கா - கழுகு கதையை மறப்பார்களா ரசிகர்கள்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தளபதி விஜய் போனில் பேசி நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இரு தரப்பு ரசிகர்களும் காக்கா கழுகு கதையை மறந்து ஒற்றுமையாக செயல்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், காக்கா கழுகு கதையை கூறினார். இதில் காக்கா என்பது விஜய்யை தான் குறிப்பிடுவதாக விஜய் ரசிகர்கள் கொதித்து எழுந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ’லியோ’ படத்தின் வெற்றி விழாவில் விஜய் பேசியது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரஜினி, விஜய் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் அந்த கட்சியை தோற்கடிக்காமல் விடமாட்டோம் என ரஜினி ரசிகர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்’ என்று கூறியிருந்தார். ரஜினியின் வாழ்த்துக்கு விஜய் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததாக அதிகாரபூர்வமாக செய்தி தொடர்பாளர் தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ’லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் இரு தரப்பு ரசிகர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் பேசிய நிலையில் காக்கா கழுகு கதையை மறந்து இருதரப்பு ரசிகர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments