மாணவர்களை சந்திக்கும் விழா.. ரசிகர்களுக்கு விஜய் போட்ட நிபந்தனை..!

  • IndiaGlitz, [Friday,June 16 2023]

தளபதி விஜய் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு தொகுதிகளில் முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவ மாணவிகளை சந்திக்கிறார் என்றும் இந்த சந்திப்பின்போது அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த விழா நடத்துவது குறித்து ரசிகர்களுக்கு விஜய் ஒரு முக்கிய நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெறும் இந்த விழா சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இந்த விழாவில் நாளை அதாவது ஜூன் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு விஜய் தன் கையால் சான்றிதழ் வழங்க இருப்பதாகவும் இந்த விழாவில் மாணவ மாணவிகளையும் பெற்றோர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பொதுவெளியில் பேனர், கட் அவுட் ஆகிவற்றை வைக்கக்கூடாது என ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அடையாள அட்டையை காண்பித்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் நிகழ்ச்சி முடிந்ததும் மாணவ மாணவியர் பெற்றோர்களுக்கு பிரியாணி வழங்கப்பட இருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

More News

ரிலீசுக்கு முன்பே 9 சர்வதேச விருது வாங்கிய 'கண்டதை படிக்காதே' திரைப்படம்!

இயக்குநர் ஜோதி முருகன் இயக்கத்தில் நடிகர் ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ் ஆகியோர் நடித்துள்ள  ‘கண்டதை படிக்காதே‘

'பரிதாபங்கள்' கோபி வீட்டுக்கு வந்த தேவதை.. ரசிகர்கள் வாழ்த்து..!

'பரிதாபங்கள்' என்ற யூடியூப் சேனலை சுதாகர் மற்றும் கோபி ஆகிய இருவரும் காமெடியாக நடத்தி வருகின்றனர் என்பதும் அவர்களுடைய காமெடி வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே.

அஜீத்துடன் 'வீரம்' படத்தில் நடித்த குட்டி பொண்ணா இவர்? என்னம்மா வளர்ந்துவிட்டார்?

அஜித் நடித்த 'வீரம்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது பெரிய பெண்ணாக மாறி இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ரஷ்ய மனைவி மற்றும் மகன்களுடன் 'லியோ' நடிகர்:  சஞ்சய் தத்  உடன் செம்ம புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் தனது குடும்பத்துடன் சஞ்சய் தத் உடன் எடுத்துக் கொண்ட

பெண் பயணியிடம் அத்துமீறல்… சர்ச்சையில் மாட்டிய 'ஜெயிலர்' பட நடிகர் விநாயகன்!

மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமாக இருந்துவரும் நடிகர் விநாயகன் சக பெண்