ஒருபோதும் அனுமதிக்க முடியாது.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்த விஜய்..!

  • IndiaGlitz, [Wednesday,December 18 2024]

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து தனது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்...
அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

More News

விஜய்யை தரக்குறைவாக விமர்சித்தால் திமுகவுக்கு தான் இழப்பு.. அமீர் அட்வைஸ்..!

திமுகவின் மூன்றாம் தர பேச்சாளர்கள்  விஜய்யை   தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்றும், அவ்வாறு விமர்சனம் செய்தால் திமுகவுக்கே இழப்பு என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

'சூர்யா 45' படம் மட்டுமல்ல.. இன்னொரு பிரபலம் படத்திலும் கமிட் ஆன 'லப்பர் பந்து' நடிகை..!

சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று, வசூலில் சக்கை போடு போட்டது. இந்த நிலையில், இந்த படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும்

கார்த்தியின் அடுத்த படம் கேங்க்ஸ்டர் கதையா? இயக்குனர் யார் தெரியுமா?

கார்த்தி நடித்த 'மெய்யழகன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அவர் 'வா வாத்தியாரே; மற்றும் 'சர்தார் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திருச்செந்தூர் முருகன் அருளால் வாழ்க்கை மாற்றும் ரகசியங்கள் பற்றி ALP ஜோதிடர் சம்பத் சொல்கிறார்

ஆன்மிகக்ளிட்ஸ் சேனலில் ALP சம்பத் அவர்கள் அளித்த பேட்டியில், திருச்செந்தூர் முருகன் அருள் பற்றிய ஆழமான புரிதலைப் பகிர்ந்துள்ளார்.

💰வீட்டில் பணம் தங்க மற்றும் லட்சுமி கடாட்சம் பெருக அசோக் அஸ்ட்ரோ சொல்லும் ரகசியம் !

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில், அஷோக் அஸ்ட்ரோ அவர்கள், பிரம்ம முகூர்த்தம் மற்றும் நவபாஷாணம் போன்ற ஆன்மீகக் கருத்துகளை விளக்கியுள்ளார்.