'வாரிசு' படத்தில் லேட்டஸ்ட்டாக இணைந்த விஜய்யின் நண்பர்: வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் விஜய், ராஷ்மிகா உள்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதும் தெரிந்ததே

நீண்ட இடைவெளிக்கு பின்னர் குடும்ப கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் நடிக்கிறார் என்றாலும் விஜய் ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் உள்ளன என்றும் கூறப்பட்டிருக்கிறது

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீமான் இந்த படத்தில் இணைந்துள்ளார். ’வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் உடன் ஸ்ரீமான் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இடையே ஷாம், சங்கீதா, சம்யுக்தா ஆகியோர் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது.