close
Choose your channels

'வாரிசு' படத்தில் விஜய் கேரக்டர் இதுதான்.. ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரிய தகவல்!

Wednesday, January 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக இன்று மாலை 5 மணிக்கு ’வாரிசு’ படத்தின் தமிழ்-தெலுங்கு ட்ரைலர் வெளியாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஆரம்பகட்டத்தில் விஜய் தனது சொந்த பெயரில் தான் பல படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக ‘நாளைய தீர்ப்பு’, ‘ரசிகன், ‘வசந்த வாசல்’, ‘ஒன்ஸ்மோர்’, ‘நேருக்கு நேர்’, ‘என்றென்றும் காதல்’, ’ப்ரியமானவளே’ உள்ளிட்ட படங்களில் அவருடைய கேரக்டர் விஜய் என்ற பெயரில்தான் இருக்கும் என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் ’ப்ரியமானவளே’ படத்திற்கு பின்னர் 22 ஆண்டுகள் கழித்து தற்போது ’வாரிசு’ படத்திலும் அவர் விஜய் ராஜேந்திரன் என்ற கேரக்டரில் நடித்திப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதற்கிடையே அட்லி இயக்கத்தில் உருவான ‘தெறி’ படத்தில் அவர் விஜயகுமார் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment