ரஜினியின் 'ஜெயிலர்' சூப்பர் வெற்றி.. தொலைபேசியில் நெல்சனை அழைத்த விஜய்..!

  • IndiaGlitz, [Friday,August 11 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்து வருகிறது. இந்த படம் உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் இந்த படம் தமிழ் திரை உலகில் ஒரு மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ’பீஸ்ட்’ என்ற படம் உருவாகிக் கொண்டிருந்த போது தான் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. அப்போது விஜய் தான் அவரை ஊக்கப்படுத்தி ரஜினியிடம் கதை சொல்லுங்கள் என்றும் கண்டிப்பாக இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்றும் ஊக்கமளித்தார். இதை ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் நெல்சன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் நெல்சனை தொலைபேசியில் அழைத்து விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமணம் குறித்தும், உறவு குறித்தும், குடும்பம் குறித்தும் பேசும் படம் தான் 'குஷி': விஜய் தேவரகொண்டா

திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களான விஜய் தேவரகொண்டா -  சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குஷி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம்

ரசிகர்களுக்கு ஃபேண்டஸி விருந்து கொடுக்க தயாராகும் 'சிரோ' திரைப்படம்..!

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரித்த 'வெப்பன்' திரைப்படத்தை அடுத்து இரண்டாவது தயாரிப்பு 'சிரோ' என்ற படம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

'தூங்காவனம்' இயக்குனரின் அடுத்த படம்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது

ஒரே மாத இடைவெளியில் ரிலீஸ் ஆகும் சந்தானம் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நடிகர் சந்தானம் நடித்த 'டிடி ரிட்டன்ஸ்' என்ற திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதையும் வசூலிலும் திருப்திகரமாக இருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது சிபிராஜின் 'மாயோன்'.. உற்சாகமான அனுபவம்..!

சிபிராஜ் நடித்த 'மாயோன்' திரைப்படம் உங்களைக் கவர்ந்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. உற்சாகமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்.!