விஜய்க்கு கணக்கு தெரியவில்லை என தா.பாண்டியன் கூறியது சரியா?

  • IndiaGlitz, [Wednesday,November 16 2016]

பிரதமரின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நேற்று விஜய் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தை பரபரப்பு அடைய செய்துள்ளது. ஒருசில அரசியல்வாதிகள் விஜய்யின் கருத்தை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விஜய் கூறிய கருத்து குறித்து கூறுகையில், விஜய் கூறிய கருத்தில் தவறு இல்லை என்றும் ஆனால் புள்ளி விபரத்தில் தவறு உள்ளது என்றும் கூறியுள்ளார். விஜய் கூறியது போல் 20% பேர் கருப்பு பணத்தை பதுக்கவில்லை என்றும், 5% பேர் மட்டுமே அதிகளவில் கருப்புப்பணத்தை பதுக்கியுள்ளனர் என்றும், அவர்கள் யார் என்று ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
உண்மையில் தா.பாண்டியன் கூறியதை போல் 20% பேர் இந்த தவறை செய்ததாக விஜய் கூறவில்லை. இந்தியாவில் 20% பேர் பணக்காரர்கள் இருப்பார்களா? அவர்களில் ஒருசிலர் செய்யும் தவறுக்காக ஏன் மீதியுள்ள 80% பேர் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்' என்றுதான் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒரு சிலர் என்பதை தா.பாண்டியன் கூறிய 5% என்றும் வைத்து கொள்ளலாம்.