இன்று பெரியார், மோடி பிறந்த நாள்.. விஜய் வாழ்த்து சொன்னது யாருக்கு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவருக்கும் பிறந்த நாள் என்ற நிலையில், விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ஒருவருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், மறைந்த தலைவர்கள், தற்போதுள்ள தலைவர்கள் பிறந்த நாளில் தவறாமல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில், இன்று ஒரே நாளில் தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல அரசியல்வாதிகள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், 'தமிழக வெற்றி கழகம்' கட்சியின் தலைவர் விஜய், "மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுடைய உடல் நலம், மகிழ்ச்சி, மற்றும் நீண்ட ஆயுளுக்கு நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய், ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொன்னதாக ஒரு சர்ச்சை சமூக வலைத்தளங்களில் எழுந்த நிலையில், தற்போது தந்தை பெரியாருக்கு வாழ்த்து சொல்லாமல், பிரதமர் மோடிக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளதும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Heartfelt birthday greetings to the Hon'ble Prime Minister of India Thiru. @narendramodi Avargal.
— TVK Vijay (@tvkvijayhq) September 17, 2024
I pray for your good health, happiness, and long life.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments