இன்று பெரியார், மோடி பிறந்த நாள்.. விஜய் வாழ்த்து சொன்னது யாருக்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,September 17 2024]

இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவருக்கும் பிறந்த நாள் என்ற நிலையில், விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ஒருவருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், மறைந்த தலைவர்கள், தற்போதுள்ள தலைவர்கள் பிறந்த நாளில் தவறாமல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில், இன்று ஒரே நாளில் தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல அரசியல்வாதிகள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், 'தமிழக வெற்றி கழகம்' கட்சியின் தலைவர் விஜய், மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுடைய உடல் நலம், மகிழ்ச்சி, மற்றும் நீண்ட ஆயுளுக்கு நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய், ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொன்னதாக ஒரு சர்ச்சை சமூக வலைத்தளங்களில் எழுந்த நிலையில், தற்போது தந்தை பெரியாருக்கு வாழ்த்து சொல்லாமல், பிரதமர் மோடிக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளதும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

2ஆம் பாகமாகிறது மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படம்..அவரே தெரிவித்த தகவல்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "வாழை" திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகம் முழுவதும் இப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது

உதை கிடைக்கு பாத்துக்க என கமலிடமும், வெய்யில் தாங்கமுடியலபா சீக்கிரம் ஷூட் முடி என ரஜினியிடமும் சொன்ன சுமித்ரா....

நடிகை சுமித்ரா கேரள திருச்சூரில் பிறந்தவர். 1970 களில் நடிகையாக முன்னணி ஹீரோக்களுடன் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர்.

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' இயக்குனர் இவர்தான்: இன்னொரு ரூ.100 கோடி வசூல் உறுதியா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம், ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியாகி சிறப்பான வரவேற்பை வசூலையும் பெற்றது.

ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார்.. அதிரடி நடவடிக்கை எடுத்த துணை முதல்வர் பவன் கல்யாண்..!

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஜனசேனா கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என  பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

'விடாமுயற்சி' படத்தின் கிளைமாக்ஸ் முடிந்தது.. ரிலீஸ் தேதி இதுதான்: ஆக்சன் கிங் அர்ஜூன்

அஜித் நடிப்பில் உருவாகும் "விடாமுயற்சி" படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.