கடுமையாக விமர்சனம் செய்த அரசியல் தலைவருக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னை கடுமையாக விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்தை கடுமையாக விமர்சனம் செய்து நாம் தமிழர் கட்சியின் சீமான் செய்தியாளர்களின் பேட்டியில் தெரிவித்தார். குறிப்பாக ஒரு பேட்டியில் அவர் லாரியில் அடிபட்டு செத்து விடுவாய் என்று பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்: அந்த வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னை கடுமையாக விமர்சனம் செய்யும் அரசியல் தலைவருக்கு கூட பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு நாகரிகமான அரசியலை விஜய் முன்வைக்கிறார் என்று அவருடைய வாழ்த்து பதிவிற்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) November 8, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments