விஜய்யின் பிகில் படத்திற்கு கிடைத்த மற்றொரு பெருமை

  • IndiaGlitz, [Tuesday,November 05 2019]

விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி விருந்தாக வெளியாகி விஜய்யின் சூப்பர்ஹிட் படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது

இந்த படத்திற்கு ஏற்கனவே பல பெருமைகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பெருமையாக இந்த படம் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கூடுதலாக பெற்றுள்ளது. தளபதி விஜய்யின் படங்கள் தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் வியாபாரத்தை விரிவுபடுத்தி வருவது தமிழ் சினிமாவுக்கே பெருமையானதாக கருதப்படுகிறது.

ஒருகாலத்தில் தமிழ்ப்படம் தமிழகத்தையே தாண்டாது. அதன்பின்னர் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் வெளி மாநிலங்கள், அண்டை நாடுகள் என பரவி தற்போது தமிழ்ப்படங்கள் உலக அளவில் வியாபாரத்தை விரிவாக்கியுள்ளது என்பது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை நிரூபிக்கின்றது
 

 

More News

விஷாலின் 'ஆக்சன்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி!

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆக்சன்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

7வது உலகக்கோப்பை டி20 போட்டிகள்: முழு அட்டவணை விபரம்

டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை அடுத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது டி20 கிரிக்கெட் போட்டி: இதனையடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்

பணியில் இருந்த பெண் தாசில்தாரை உயிரோடு கொளுத்திய விவசாயி: பெரும் பரபரப்பு

தெலுங்கானா மாநிலத்தில் பணியில் இருந்த பெண் தாசில்தார் ஒருவரை விவசாயி ஒருவர் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்பட்டுள்ளது

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு 'விஜய்சேதுபதி' என டைட்டில்!

நடிகர்களின் பெயரிலேயே ஒரு திரைப்படத்தின் டைட்டிலும் அமைவது என்பது திரையுலகில் மிகவும் அபூர்வமாக நடைபெறும் நிகழ்வு ஆகும். 'அன்புள்ள ரஜினிகாந்த்' போன்ற ஒருசில படங்கள் மட்டுமே

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த சூப்பர் அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் 'இரும்புத்திரை' இயக்குநர் மித்ரன் இயக்கத்தில்