அமித்ஷாவின் 'இந்தி' பேச்சுக்கு 'பீஸ்ட்' பட வசனம் மூலம் பதிலடி தந்தாரா விஜய்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டுமென சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இசைப்புயல் ஏஆர் ரகுமான் ’தமிழ் தான் இணைப்பு மொழி’ என்று கூறினார். மேலும் அனிருத் சிம்பு உள்ளிட்டோர் ’தமிழால் இணைவோம்’ என நேற்று டுவிட்டரில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமித்ஷாவின் ஹிந்தி பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் ’பீஸ்ட்’ திரைப்படத்தில் விஜய் பேசும் வசனம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
’பீஸ்ட்’ படத்தில் உள்ள ஒரு காட்சியில் 'உங்களுக்கு மொழிமாற்றம் செய்ய தான் ஹிந்தி கற்றுக்கொள்ள முடியாது என்றும் தேவை என்றால் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்’ என்றும் விஜய் பேசுவதாக ஒரு வசனம் இருப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர் .
மேலும் அமித்ஷாவின் இந்தி பேச்சுக்கு இந்த ஒரு வசனமே விஜய்யின் பதிலடி என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments