சென்னை காசி தியேட்டரிலும் 'சர்கார்' பேனர் கிழிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Thursday,November 08 2018]

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளீயானது. இந்த படம் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் படம் வெளியாகும் திரையரங்குகள் முன் வானுயர கட் அவுட்டுக்கள் மற்றும் பேனர்களை வைத்து அசத்தினர்.

இந்த நிலையில் 'சர்கார்' படத்தில் ஆளும் அரசுக்கு எதிராக ஒருசில வசனங்கள் மற்றும் காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த கண்டனங்கள் வழக்கம்போல் படத்தின் புரமோஷனுக்கு உதவும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிமுக தொண்டர்கள் சென்னை, கோவை ஆகிய பகுதியில் நடத்திய முற்றுகை போராட்டத்தால் 'சர்கார்' படம் ஓடும் தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டும், கட் அவுட்டுக்கள் அடித்து நொறுக்கப்பட்டது. ஒருசில இடங்களில் காட்சிகள் ரத்டு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. அதிமுக தொண்டர்களை எதிர்க்க முடியாமல் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை காசி தியேட்டரிலும் 'சர்கார்' பட பேனர்கள் கிழிக்கப்பட்டது. இந்த படத்திற்கு அதிமுகவினர்களின் எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த படத்தை திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்களும், கோடிக்கணக்கில் முதலீடு போட்ட விநியோகிஸ்தார்களும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.