22 மணி நேரத்தில் 22 லட்சம். 'பைரவா' செய்த சாதனை
- IndiaGlitz, [Saturday,October 29 2016]
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் டீசர் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த டீசர் வெறும் 22 மணி நேரத்தில் 22 லட்சம் பார்வையாளர்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த டீசருக்கு லைக்குகள் வெகுவேகமாக குவிந்து வருகிறது. தற்போது வரை இந்த டீசருக்கு 1.5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் கிடைத்துள்ளது. மேலும் நொடிக்கு நொடி லைக்குகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.
இதுவரை வெளியான இந்திய படங்களின் டீசர்களில் ரஜினியின் 'கபாலி' இரண்டு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்துள்ள நிலையில் 'பைரவா' படத்தின் டீசரின் எண்ணிக்கை 'கபாலி' எண்ணிக்கையை தாண்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.