விஜய்யின் 'பைரவா' படத்தின் கடந்தவார சென்னை வசூல் நிலவரம்
- IndiaGlitz, [Monday,January 30 2017]
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து கலவையான விமர்சனங்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றையும் மீறி தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக திருப்திகரமான வசூலை தந்து கொண்டிருந்தது என்பதை பார்த்தோம். மேலும் வேறு பெரிய படங்கள் வெளியாகாததால், கடந்த குடியரசு தின விடுமுறை தினத்தில் இந்த படத்தின் வசூல் நன்றாக இருந்ததாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கடந்த வார இறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம். சென்னையில் இந்த படம் 22 திரையரங்குகளில் 224 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.34,95,140 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் இருந்தனர். மேலும் இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.6,51,08,740 என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொங்கல் விருந்தாக வெளிவந்த இன்னொரு படமான பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் 6 திரையரங்குகளில் 21 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,37,520 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.36,43,510 ஆகும்