அடுத்த கட்டத்திற்கு செல்கிறது விஜய்யின் 'பைரவா'

  • IndiaGlitz, [Tuesday,September 20 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜமுந்திரி மற்றும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
மேலும் 'பைரவா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியிலும் அதனையடுத்து வெளிநாட்டில் பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதனையடுத்து மூன்று மாதங்களில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிக்கப்பட்டு வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.