'பைரவா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திட்டங்கள்

  • IndiaGlitz, [Saturday,September 10 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதை அவ்வப்போது அறிவித்து வருகிறோம். இந்நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புகளின் திட்டங்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.
இதன்படி 'பைரவா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 28 வரை ராஜமுந்திரியில் நடைபெறவுள்ளதாகவும், அதன்பின்னர் படக்குழுவினர் சென்னையில் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் ஒரு பாடலுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலுடன் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை விஜய் முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, பாப்ரிகோஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.

More News

சாய்பல்லவி 'ஐ லவ் யூ' சொல்ல விரும்பிய நடிகர்

மலையாள நடிகை சாய்பல்லவி என்றாலே அனைவருக்கும் 'மலர்' கேரக்டர்தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு 'பிரேமம்' படத்தில் அவர் மலர் கேரக்டராகவே வாழ்ந்தார்...

விக்ரம் பிரபுவுக்கு 'லிப்லாக்' கொடுக்க ஷாம்லி தயங்கியது ஏன்?

சமீபத்தில் விக்ரம்பிரபு நடிப்பில் வெளிவந்த 'வாஹா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'வீரசிவாஜி' திரைப்படம் ...

காவிரி நீர் பிரச்சனை. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுஹாசினி

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், அரசியல்...

முதன்முதலாக சீனியர் நடிகருக்கு ஜோடியான அமலாபால்

கோலிவுட் திரையுலகில் நடிக்கத்தெரிந்த மிகக்குறைந்த நடிகர்களில் ஒருவராகிய அமலாபால், சமீபத்தில் தனுஷூக்கு ஜோடியாக 'வடசென்னை'...

'இருமுகன்' முதல்நாள் தமிழக வசூல் நிலவரம்

'அரிமா நம்பி; ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்த 'இருமுகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...