விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தல ரசிகர்களின் கட்-அவுட்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய்யும், தல அஜித்தும் கோலிவுட் திரையுலகில் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது இருவரிடமும் நெருங்கிய பழகியவர்களுக்கு தெரியும்.
ஆனால் அதே நேரத்தில் விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போடும் சண்டை உலகமே அறிந்தது. குறிப்பாக இருவரில் ஒருவர் படம் வெளியாகும் போது இன்னொரு தரப்பு கலாய்ப்பதும், அதற்கு பதிலடி கொடுப்பதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தல, தளபதி ரசிகர்கள் ஒருசில இடங்களில் ஒற்றுமையாக இருக்கும் அபூர்வ சம்பவங்களும் நடப்பது உண்டு. ஜனவரி 12ல் வெளியாகவுள்ள விஜய்யின் 'பைரவா' படத்திற்கு தல ரசிகர்கள் கட் அவுட் வைத்து அந்த படம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர். இந்த கட்-அவுட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கட்-அவுட் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments