பேப்பரில் ஆட்டோகிராப் போடுவதெல்லாம் பழசு.. பாடகருக்கு விஜய் போட்ட கையெழுத்து எதில் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக பிரபலங்கள் பேப்பர்களில் ஆட்டோகிராப் போட்டு தங்களது ரசிகர்களுக்கு தருவதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் பாடகர் ஒருவர் தனது மொபைல் போனில் விஜய் இடம் ஆட்டோகிராப் வாங்கி இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகின் பாடகர் மற்றும் இசையமைப்பாளர், நடிகை சங்கீதாவின் கணவர் க்ரீஷ். இவர் விஜய்க்காக ஒரு சில படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் குறிப்பாக ’துப்பாக்கி’ ’நண்பன்’ ’வேட்டைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் விஜய்க்காக பாடி உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி ஒரு சில படங்களில் இவ்வாறு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் க்ரீஷ், சற்றுமுன் விஜய்யிடம் தனது மொபைல் போனில் ஆட்டோகிராப் வாங்கிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அவரது மொபைல் போனில் ’பிரியமுடன் விஜய்’ என்று விஜய்யின் கையெழுத்து பதிவு செய்யப்பட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் பேப்பரில், டைரியில் ஆட்டோகிராப் வாங்குவதெல்லாம் ரொம்ப பழசு, மொபைல் போனில் ஆட்டோகிராப் வாங்குவது தான் புதுசு, நீங்கள் மிகவும் லக்கி ஆனவர் என்று கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Got My Phone Autographed...
— Krishh (@krishoffl) March 9, 2024
Love u Anna....🙏🙏🙏#GOAT pic.twitter.com/vnRlVLgcQD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments