close
Choose your channels

'விஜய் 61' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? ரிலீஸ் எப்போது?

Saturday, November 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. மேலும் விஜய் நடிக்கும் 61வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் இந்த படம் வரும் 2017 தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே அடுத்த ஆண்டு பொங்கல் மற்றும் தீபாவளி ஆகிய இரண்டு முக்கிய தினங்களிலும் இளையதளபதியின் படங்கள் வெளிவரவுள்ளதால் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கும் இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment