close
Choose your channels

விஜய்-அட்லி படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

Tuesday, November 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது
இந்நிலையில் விஜய்யின் 61வது படத்தை அட்லி இயக்குகிறார் என்பதும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது என்பதும் ஏற்கனவே அறிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் முரளி ராமசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை தயாரிப்பு தரப்பு இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை வெளியிடவில்லை. இந்த படத்திற்கு 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார் என்பது மட்டும் இப்போதைக்கு தெரிய வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment