விஜய்-அட்லி இணையும் படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 16 2016]

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலிலும் தெறிக்க வைத்தது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை அடுத்து விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் அல்லது தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் விஜய் படத்தை அட்லி இயக்குவது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. விஜய்யின் அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணியை அட்லி தொடங்கிவிட்டதாகவும் விரைவில் இந்த பணி நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த படம் விஜய்யின் 61வது படமா? அல்லது 62வது படமா? என்ற ஒரே கேள்வி மட்டுமே தற்போது எழுந்துள்ளது. மேலும் இந்த படம் 'தெறி' படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்பதை மட்டும் அட்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

More News

விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல ஹீரோ

சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி; ஆனந்த்சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஷிபுதமீன்ஸ் அறிவிப்பு செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

சென்னையில் 'கபாலி'யின் வசூல் நிலவரம்

சென்னையில் 'கபாலி' திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் 15 திரையரங்குகளில் 110 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.27,01,440 வசூலாகியுள்ளது. திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகெயனின் 'ரெமோ'

சிவகார்த்திகேயன் முதன்முதலாக நர்ஸ் உள்பட பல வித்தியாசமான வேடங்களில் நடித்த 'ரெமோ' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டாரின் '2.0' டீசர் ரிலீஸ் எப்போது ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று 25வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த படத்தின் வசூல் பல சாதனைகளை தவிடுபொடியாக்கி வெற்றிகரமாக இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இன்று முத்துகுமாரிடம் ஒரு முக்கிய விஷயம் சொல்ல இருந்தேன். ஆர்.பார்த்திபன் வேதனை

பிரபல பாடலாசிரியர் முத்துகுமாரின் மறைவிற்கு கோலிவுட் பிரபலங்கள் ஒவ்வொருவராக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர், இயக்குனர் பார்த்திபன் ...