பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுப்பாரா விஜய்?

  • IndiaGlitz, [Monday,June 20 2016]

ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்தநாள் என்றாலே ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சென்னை களைகட்டிவிடும். போஸ்டர்கள், கட் அவுட்டுகள், தோரணங்கள், ரத்த தானம், அன்னதானம் என விஜய் ரசிகர்கள் விஜய்யின் பிறந்த நாளை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.


விஜய்யும் தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போது ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடுவது, புகைப்படம் எடுத்துக்கொள்வது மற்றும் ரசிகர்கள், பத்திரிகையாளர்களுக்கு பிரியாணி விருந்து என அசத்திவிடுவதும் உண்டு

மேலும் அன்றைய தினத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், தையல் மிஷின் போன்ற உபகரணங்களை நலிந்தோர்களுக்கு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுவதுண்டு.

ஆனால் இம்முறை விஜய் தனது 60வது படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் பிறந்தநாளின்போது சென்னையில் இருக்க மாட்டார் என்ற தகவல் வந்துள்ளது. ஆனாலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விஜய் சென்னை வர வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். விஜய் இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுப்பாரா? அல்லது படப்பிடிப்பில் பிசியாகிவிடுவாரா? என்பதை இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.