'லியோ' வெற்றி விழா முடிந்ததும் தாய்லாந்து பறந்த விஜய்.. மாஸ் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது என்பது அதில் விஜய்யின் பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’லியோ’ வெற்றி விழா முடிந்த கையோடு தற்போது அவர் தாய்லாந்து பறந்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 68’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தான் அவர் தாய்லாந்து செல்கிறார்.
தாய்லாந்து நாட்டில் ஏற்கனவே இயக்குனர் வெங்கட் பிரபு உட்பட படக்குழுவினர் படப்பிடிப்புக்கு தயாராக இருக்கும் நிலையில் விஜய் வந்ததும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தாய்லாந்தில் சுமார் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் ஒரு மெலடி பாடலின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் 'தளபதி 68’ படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாய்லாந்து படப்பிடிப்பு முடித்தவுடன் சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சித்தார்த் ஒளிப்பதிவில் வெங்கட் ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
#ThalapathyVIJAY left to Thailand for the shoot of #Thalapathy68
— Actor Vijay Fans (@Actor_Vijay) November 3, 2023
pic.twitter.com/oo41EExI5x
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments