விஜய்யின் 'கத்தி' தெலுங்கு ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்?
- IndiaGlitz, [Wednesday,August 05 2015]
இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'கத்தி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இருவேடங்களில் விஜய் மற்றும் சமந்தா நடித்த இந்த திரைப்படம், விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனையை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியது. தமிழில் சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜய் வேடத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் இந்த படத்தை தெலுங்கில் கோபிசந்த் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய், அசின் நடித்த காவலன் படத்தின் ரீமேக் படமான 'பாடிகார்டு' படத்தை வெங்கடேஷ், த்ரிஷா நடிப்பில் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் நடித்த பலுபு படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்ராஜூ தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் கதையை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஏ.ஆர்.முருகதாஸே சில மாற்றங்கள் செய்து தர ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. விஜய் இந்த படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கேரக்டரில் அபாரமாக நடித்திருந்தார். ஜூனியர் என்.டி.ஆர், விஜய் அளவுக்கு ஈடுகொடுத்து நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.