தேசிய விருதைவிட பெரியது விஜய் பாராட்டு: குப்பை கதை நாயகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் அனைத்து ஊடகங்களாலும், சமூக வலைத்தள பயனாளிகளாலும் பாராட்டப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் மனிஷா நாயகியாக நடித்திருந்தார். தவறான வழியில் சென்ற மனைவியை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு பெருந்தன்மையுள்ள கணவன் குறித்த கதைதான் இந்த படம்.
இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த தளபதி விஜய் இந்த படத்தின் கான்செப்ட்டையும் தினேஷின் நடிப்பையும் பாராட்டியுள்ளார். விஜய்யின் பாராட்டு தனக்கு தேசிய விருதினை விட பெரியது என்று தினேஷ் பெருமையாக கூறியுள்ளார். இவர் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தில் சிறப்பாக நடனம் அமைத்ததற்காக தேசிய விருதினை பெற்றவர் என்பதும் விஜய் நடித்த யூத், பகவதி, சிவகாசி, போக்கிரி, உள்பட பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் எனக்கேற்றவாறு சிறப்பான கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நாயகனாக நடிக்கவிருப்பதாகவும், இருப்பினும் தனக்கு நடனப்பயிற்சியாளராக பணிபுரிவதில்தான் விருப்பம் அதிகம் என்றும் கூறியுள்ளார் தினேஷ்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments