கார் வரி விவகாரம்: நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு!

  • IndiaGlitz, [Saturday,July 17 2021]

விஜய் வாங்கிய வெளிநாட்டு கார் வரி விவகாரம் குறித்த தீர்ப்பு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த நிலையில் அந்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து விஜய் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிலிருந்து விஜய், ரோல்ஸ் ராய் கார் ஒன்றை வாங்கினார். அந்த காருக்கு அவர் இறக்குமதி வரி செலுத்தி விட்ட நிலையில் நுழைவு வரி செலுத்தவில்லை. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதனால் விஜய் நுழைவு வரி கட்ட வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி வழக்கு தொடர்ந்தற்காக ரூபாய் ஒரு லட்சம் அபராதம் கட்டவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

மேலும் விஜய் குறித்து ஒரு சில விமர்சனங்களையும் தனி நீதிபதி தெரிவித்தார். இந்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் குறித்து தனி நீதிபதியின் விமர்சனம் குறித்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், முன்னாள் நீதிபதிகள் வழக்கறிஞர் என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் விஜய் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தனி நீதிபதியின் தீர்ப்பில் தன்னைப்பற்றி பதிவு செய்த விமர்சனங்களை நீக்கவேண்டும் என்றும், அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பிலிருந்து மேல்முறையீடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனு இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

More News

அஜித்துக்கு ஒரு எலும்பே எடுத்துட்டாங்க: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேட்டி!

தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களில் ஒருவரான கணல் கண்ணன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அஜித்துக்கு ஒரு எலும்பையே எடுத்து விட்டதாக கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 

4 கதாநாயகிகள்...சைக்கோ திரில்லர் கதை....! படத்தில் இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்....!

ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர், ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவர் தான் நட்டி என்கிற நடராஜ்

மரவள்ளித்தோப்பில் தனிமை ..! தட்டிக்கேட்ட கணவன் கொலை.....!

கள்ளக்காதலனும், மனைவியும், கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: திரையரங்குகள் திறக்க அனுமதியா?

தமிழகத்தில் ஜூலை 19ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதை அடுத்து ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ஷங்கர்-ராம்சரண் தேஜா படத்தின் வில்லன் இவரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக