விஜய் ஆண்டனி எடுத்த மாஸ் நடிகர்களின் முயற்சி
Wednesday, October 5, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மாஸ் நடிகர்கள் மட்டுமே இரட்டை வேடம் என்னும் முயற்சியை எடுப்பார்கள். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்தி நடிக்க வேண்டும் என்பதால் இந்த விஷப்பரிட்சையில் பலர் இறங்குவதில்லை.
இந்நிலையில் முதன்முதலாக விஜய் ஆண்டனி 'எமன்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறாராம். அவர் நடித்து முடித்துள்ள 'சைத்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது அவர் 'எமன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஜீவா சங்கர் இயக்கி வருகிறார். இவர்தான் விஜய் ஆண்டனி நடித்த முதல் படமான 'நான்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைக்கின்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments