நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்திருந்தால்.. விஜய் ஆண்டனி மனைவியின் உருக்கமான பதிவு..!
- IndiaGlitz, [Monday,October 09 2023]
விஜய் ஆண்டனி மகள் மீரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி உருக்கமாக தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு கண்ணீரை வர வைக்கும் வகையில் உள்ளது.
விஜய் ஆண்டனி - பாத்திமா விஜய் ஆண்டனி தம்பதியின் 16 வயது மகள் மீரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய குடும்பம் பெரும் அதிர்ச்சி அடைந்தது.
இதுகுறித்து விஜய் ஆண்டனி சமீபத்தில் செய்த பதிவில், ‘ தனது மகள் மறைவிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டும் வரவில்லை, ஆனால் தன்னால் யாருக்கும் பாதிப்பு அடையக் கூடாது என்ற நோக்கத்தில் தான் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், இன்னும் மகள் மீராவின் நினைவுகளில் இருந்து மீளவில்லை என்றும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் கண்ணீர் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் உன்னை எனக்கு மிக அருகிலேயே வைத்திருந்திருப்பேன், சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட உன்னைக் காட்டி இருக்க மாட்டேன், இப்போது உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன், நீ இல்லாமல் வாழ முடியாது, அம்மா - அப்பாவிடம் திருப்பி வந்து விடு. லாரா உனக்காக காத்திருக்கிறாள். லவ் யூ தங்கமே’ என பதிவு செய்துள்ளார். இந்த பதிவை படித்தால் கண்ணீர் வருகிறது என பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளனர்.
If I’d known u will live only for 16 yrs,
— Fatima Meera Vijay Antony (@mrsvijayantony) October 9, 2023
I would have just kept u very very close to me,not even shown you to the sun and moon,am drowning and dying with ur thoughts,can’t live without you ,come back to babba and amma.laara keeps waiting for u,love u Thangam@vijayantony pic.twitter.com/7PAQ5Ji9qp