'அது நான் இல்லை' 'பிரச்சனை தீர்ந்துவிட்டது'.. விஜய் ஆண்டனியின் 2 அறிக்கைகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ஆண்டனி நடித்த 'மழை படிக்காத மனிதன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் இந்த படம் குறித்து ’அது நான் இல்லை’ என்று முதலில் அறிக்கை வெளியிட்ட நடிகர் விஜய் ஆண்டனி அதன் பின்னர் ’பிரச்னை தீர்ந்துவிட்டது’ என அடுத்தடுத்து இரண்டு அறிக்கைகள் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’மழை பிடிக்காத மனிதன்’ வெளியான முதல் நாள் இயக்குனர் விஜய் மில்டன் திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டு, ‘இந்த படத்தில் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிட காட்சி நான் இயக்கியது அல்ல, இந்த காட்சிகள் எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை’ என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் அடுத்தடுத்து இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளது என்ன என்று பார்ப்போம்.
மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிட காட்சியை தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்துள்ளதாக என் நண்பர் படத்தின் இயக்குனர் திரு விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்து இருந்தார். அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை’ என்று விஜய் ஆண்டனி தனது முதல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இரண்டாவது அறிக்கையில், ‘மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ஓர் அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்களும் இயக்குனரும் கலந்து பேசி அதை இன்று முதல் திரையரங்குகளில் நீக்கி விடுவதென முடிவு எடுத்து
விட்டனர்.
இந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை திரையரங்களில் பார்த்து ஆதரவு தருமாறு தங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
tnx for the clarification @vijayantony sir. we hav come a long way the journey was so confortable we hav a greater understanding and confortable with each other because of the passion and focus in the craft.
— sd.vijay milton (@vijaymilton) August 5, 2024
தயாரிப்பாளருக்கும் எனக்கும் இருந்த பிரச்னை @realsarathkumar அவர்கள்… https://t.co/J8RjyB2ekN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments