எடிட்டராக மாறிய பிரபல நடிகர்-இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Sunday,September 03 2017]

கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் இயக்குனர் ஆவது, இயக்குனர் நடிகர் ஆவதும், நடிகர் இசையமைப்பாளர் ஆவதும், இசையமைப்பாளர் நடிகர் ஆவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள். ஆனால் ஒரு நடிகர், இசையமைப்பாளர் எடிட்டராக மாறுவது என்பது அபூர்வமாக நடைபெறும். அந்த வகையில் பிரபல நடிகரும், இசையமப்பாளருமான விஜய் ஆண்டனி, தன்னுடைய அடுத்த படத்தின் எடிட்டராகவும் மாறியுள்ளார்.

விஜய் ஆண்டனி தற்போது அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 'அண்ணாதுரை' என்ற படத்தில் நடித்து வருகிறார். குடிகாரர், ஆசிரியர் என இரு வேடங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, இந்த கேரக்டர்களை சுற்றித்தான் இந்த படத்தின் கதை இருப்பதாக கூறியுள்ளார். இந்த படத்தில் நடித்து, இசையமைப்பதோடும் தற்போது எடிட்டிங் பணியையும் அவர் கையில் எடுத்துள்ளார்.

பொதுவாக ஒரு இசையமைப்பாளருக்கு ஆடியோ ஃபைல்களை எடிட்டிங் செய்யும் அனுபவம் இருப்பதால், திரைப்படத்தையும் எடிட்டிங் செய்வது பெரிய வேலையாக இருக்காது என்றும், கடந்த சில வருடங்களாகவே எடிட்டிங்கில் ஆர்வத்துடன் இருந்த தான், தற்போது முழு படத்திற்கும் எடிட்டிங் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழில் 'அண்ணாதுரை', தெலுங்கில் 'இந்திரசேனா' ஆகிய பெயர்களில் தயாராகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வரும் 4ஆம் தேதி மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களால் வெளியிடப்படவுள்ளது.

More News

அனிதாவின் மரணம் அர்த்தமுள்ளதாக மாற வேண்டும் : இயக்குனர் சுசீந்திரன்

டாக்டர் கனவு, நீட் தேர்வு காரணமாக கனவாகவே போனதால் இன்று காற்றில் கலந்துவிட்டது அனிதாவின் ஆத்மா...

அனிருத் இசையை கேட்டு பிரமித்த பிரமாண்ட இயக்குனர்

இளம் இசைப்புயல் அனிருத்துக்கு இந்த ஆண்டு பிரம்மாதமான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும்...

அனிதாவுக்கு நடிகர் சந்தானம் இரங்கல் செய்தி

மருத்துவ கனவுகளுடன் வாழ்ந்த அனிதா, உயிரற்ற பிணமாகி நேற்று சாம்பலும் ஆகிவிட்டார். ஆனாலும் அவருக்கான இரங்கல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு கொண்டே வருகிறது...

அனிதாவுக்கு அஞ்சலி. தினகரனுக்கு உதவி செய்த திருமாவளவன்

அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் மீது அனைவரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் எடப்பாடி தலைமையிலான அரசே இதற்கு காரணம் என்றும், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்...

மருத்துவ முத்தம் போதும், இனி மருத்துவ யுத்தம்தான் தேவை: திரையுலகினர் கொதிப்பு

ஜல்லிக்கட்டு, நெடுவாசல், விவசாயிகள் பிரச்சனை என எந்த பிரச்சனைக்கும் முதல் ஆளாக குரல் கொடுப்பது திரையுலகினர்கள் தான்.