எஸ்.ஏ.சியின் 'டிராபிக் ராமசாமி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவரது கேரக்டரில் பிரபல இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அறிமுக இயக்குனர் விஜய்விக்ரம் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் விஜய்விக்ரம் உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஒரு நடிகராகவே நடிக்கவுள்ளதாகவும், சமூக அவலத்தை பார்த்து பொங்கும் ஒரு முக்கிய கேரக்டர் அவருக்கு தரப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் எஸ்.ஏ.சி இயக்கிய 'சுக்ரன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது அவர் நடிக்கும் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
எஸ்.ஏ.சிக்கு ஜோடியாக நடிகை ரோகினி நடிக்க, நடிகை அம்பிகா இந்த படத்தில் நீதிபதியாக நடிக்கின்றார். மேலும் ஆர்.கே.சுரேஷ் இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஹரஹர மகாதேவகி படத்தின் இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைக்கும் இந்த படத்திற்கு குகன் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments