அன்புச்செழியனுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் மரணத்தை அடுத்து கோலிவுட் திரையுலகில் பலர் அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் ஒருசிலர் அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இன்று காலை இயக்குனர் சீனுராமசாமி, அன்புச்செழியனை உத்தமர் என்று கூறியதை பார்த்தோம். அந்த வகையில் தற்போது நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் அன்புச்செழியனுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
நடிகர் சசிகுமார் அவர்கள் மிகவும் சிறந்த இயக்குனர் மற்றும் நல்ல மனிதர். அவரது உறவினர் அசோக்குமார் அவர்களின் தற்கொலையை நினைத்து நான் மிகவும் மனவேதனைப்படுகிறேன். அசோக்குமார் அவர்கள் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை முடிவை தவிர்த்திருக்க வேண்டும்
’நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் அன்புச் செழியனிடம் பணம் வாங்கித்தான் படம் எடுத்து வருகிறேன். அதை, முறையாகத் திரும்ப செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரை அன்புச் செழியன் என்னிடம் சரியான முறையில்தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்திரிப்பதாகத் தோன்றுகிறது’
திரைப்படத்துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கடன் வாங்கி படம் எடுத்துதான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள். திரு அசோக்குமார் அவர்களின் மரணம் தற்கொலையின்ன் கடைசி மரணமாக இருக்க வேண்டும். நான் தற்கொலைக்கு எதிரானவன். ஏனென்றால் தற்கொலை செய்து கொண்ட என் தந்தையால் நானும் என் தாய் மற்றும் என் குடும்பம் அனுபவித்த கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். ‘எனக்கும் கடன் இருக்கிறது, உழைத்துக்கொண்டிருக்கிறேன். RIP - திரு. அசோக் குமார்’ என்று விஜய் ஆண்டனி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments