close
Choose your channels

'பிச்சைக்காரன் 3' எப்போது? விஜய் ஆண்டனி பதில்..!

Monday, May 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன் 2’ கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்டது. இதனை அடுத்து விஜய் ஆண்டனி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசை அமைத்து, எடிட்டிங் செய்து தயாரித்த திரைப்படம் ’பிச்சைக்காரன் 2’. இந்த படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படம் ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.3.5 கோடியும் தெலுங்கு மாநிலங்களில் ரூ.4.5 கோடியும் வசூல் செய்ததாகவும் உலக அளவில் இரண்டு நாட்களில் இந்த படம் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ’பிச்சைக்காரன்’ படத்தின் அளவுக்கு ’பிச்சைக்காரன் 2’ படத்தின் வசூல் இல்லை என்றாலும் இந்த படம் டீசன்ட்டான வசூலை பெற்று வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ’பிச்சைக்காரன்’ படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இரண்டாம் பாகம் போலவே மூன்றாம் பாகத்தையும் தானே இயக்க இருப்பதாகவும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ’பிச்சைக்காரன் 3’ திரைப்படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment