'பிளான் பண்ணி தான் 2000 ரூபாய் நோட்டை தடை பண்ணியிருக்காங்க: விஜய் ஆண்டனி..
Send us your feedback to audioarticles@vaarta.com
பிளான் பண்ணி தான் 2000 ரூபாய் நோட்டை அரசு தடை செய்துள்ளார்கள் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்து இயக்கிய ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகராக இந்த படத்தை பார்த்த விஜய் ஆண்டனி அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ’பிச்சைக்காரன்’ திரைப்படம் வெளியான ஒரு சில மாதங்களில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. தற்போது ’பிச்சைக்காரன் 2’ வெளியான தினத்தில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி ’இது எதேச்சையாக நடக்கவில்லை, ,பிளான் பண்ணி தான் நடந்தது, ’பிச்சைக்காரன்’ படம் வெளியான போது பத்து ரூபாய் நோட்டாக இருந்தால், கள்ள நோட்டு இருக்காது, பெரிய மதிப்புள்ள நோட்டாக இருப்பதால் எளிதாக மறைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சொன்னேன், கவர்மெண்ட் உடனே 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்தார்கள். ஆனால் 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டார்கள். அப்போது நான் வருத்தப்பட்டேன்.
ஆனால் அப்போதே பிளான் பண்ணி தான் இந்த 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டால்தான் நிறைய பேர் அதை வாங்கி பதுக்குவார்கள், அந்த பதுக்கல்காரர்களை மொத்தமாக பிடித்து விடலாம் என்று பிளான் பண்ணியே 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டு தற்போது அதை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் பெரும்பாலான மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. 2000 ரூபாய் நோட்டை அதிகமாக பதுக்கி வைத்து இருக்கும் பிகிலிகள் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று கூறினார்.
பிச்சைக்காரன் முதல் பாகத்தில் பணமதிப்பிழப்பு குறித்து வசனம் வைத்தோம்... ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்த போது வருத்தம் அடைந்தோம்: விஜய் ஆண்டனி#vijayantony #pichaikaran2 pic.twitter.com/FOE4Flay6q
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments