விஜய் இடத்தை விஜய் ஆண்டனி பூர்த்தி செய்தார்: எஸ்.ஏ.சந்திரசேகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக போராளியான டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை எஸ்.ஏ.சியின் உதவியாளர் விக்கி இயக்குகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒருசில காட்சிகளே வரும் ஒரு முக்கிய காட்சியில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் விக்கி தனது ஆசையை தெரிவித்தாராம். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் அந்த கேரக்டரில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த தகவலை நேற்று நடைபெற்ற இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் ரிலீஸ் விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கிய தனக்கு இந்த படம் ஒரு அடையாளமாக இருக்கும் என்றும், இந்த படத்தில் சிறு வேடங்கள் என்றாலும் நடிக்க சம்மதம் தெரிவித்த குஷ்பு, சீமான், பிரகாஷ்ராஜ், விஜய் ஆண்டனி ஆகியோர்களுக்கு தனது நன்றி என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout