விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா?

  • IndiaGlitz, [Thursday,March 16 2017]

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்'. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் மெகா ஹிட்டாகி ஒரே படத்தின் மூலம் தெலுங்கின் முன்னணி ஹீரோவாக விஜய் ஆண்டனியை மாற்றிய படம் என்றும் கூறலாம்
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான 'நூறு சாமிகள் இருந்தாலும், அம்மா உன்னை போல் ஆகிடுமா' என்ற பாடல் தற்போது 2017ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுக்காக தேர்வு பெற்றுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் ஏக்நாத் எழுதியுள்ளார்.
இந்த பாடலுடன் கபாலி' படத்தில் இடம்பெற்ற அருண்காமராஜின் 'நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்', சென்னை 28 II' படத்தில் இடம்பெற்ற பார்த்தி பாஸ்கரின் 'இது கதையா', 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம்பெற்ற 'தள்ளிப்போகாதே' மற்றும் 'நானும் ரெளடிதான்' படத்தில் இடம்பெற்ற கவிஞர் தாமரையின் 'நீயும் நானும்' ஆகிய பாடல்களும் போட்டியிடுகின்றன
இந்த விருதுக்கு பலத்த போட்டிகள் இருந்தாலும் ஏக்நாத் எழுதிய 'பிச்சைக்காரன்' பாடல் விருதினை வென்று சர்வதேச அங்கீகாரம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.